குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜினாமா!

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 03:32 pm
gujarat-congress-mla-resigns

குஜராத் மாநிலம் ஜாம்நகர் ரூரல் தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ., இன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். இதன் மூலம், கடந்த நான்கு நாட்களில், காங்கிரசை சேர்ந்த, மூன்று எம்.எல்.ஏ.,க்கள் பதவி விலகியுள்ளனர். 

குஜராத் மாநிலத்தில் பா.ஜ.,வை சேர்ந்த விஜய் ரூபானி முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், காங்கிரசை சேர்ந்த முக்கிய தலைவர்கள், அந்த கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.,வில் ஐக்கியம் ஆகி வருகின்றனர்.  

இந்த நிலையில், நான்கு நாட்களுக்கு முன், காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ., ஒருவர், தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அந்த கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார். அதற்கு அடுத்த நாள்,  மேலும் ஒரு காங்., - எம்.எல்.ஏ., அதே நடவடிக்கையில் ஈடுபட்டார். 

இந்நிலையில், ஜாம்நகர் ரூரல் தாெகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ., வல்லப் தரவிஜயா, இன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். சபாநாயகரை சந்தித்து, ராஜினாமா கடிதத்தை அளித்த அவர், தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். தன் சொந்த விருப்பத்தின் பேரிலேயே, பதவி விலகுவதாகவும் அறிவித்துள்ளார். 

எனினும், இவரும், விரைவில் பா.ஜ.,வில் இணைவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close