எலக்ஷனில் இது புதுசு கண்ணா புதுசு...!

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 04:13 pm
new-features-for-the-electorate-this-2019-mp-election

இருபது ஆண்டுகளுக்கு முன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை அறிமுகப்படுத்தியதில் தொடங்கி, வாக்காளர் ஒப்புகைச் சீட்டை கொண்டு வந்துள்ளது வரை, ஒவ்வொரு தேர்தலிலும் இந்திய தேர்தல் ஆணையம்  புது  புது யுக்திகளை  புகுத்தி வருகிறது.

தேர்தலை நேர்மையாகவும், எளிமையாகவும் நடத்தும் நோக்கிலும், வாக்காளர்களின் வசதிக்காகவும் புகுத்தப்பட்டு வரும் புதுமைகள் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலிலும் தொடர உள்ளது.

இவற்றில் முக்கிய அம்சமாக, மக்களவைத் தேர்தலுக்காக இம்முறை நாடு முழுவதும் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) அனைத்திலும் வேட்பாளர்களின் புகைப்படங்களும் இடம்பெறவுள்ளன.

வாக்காளர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் வேட்பாளர்களை எளிதில் அடையாளம் காண வசதியாக, இவிஎம் இயந்திரத்தில் இந்த மாற்றம் சேர்க்கப்பட உள்ளது. இதுநாள்வரை, இவிஎம் இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், அவர்கள் போட்டியிடும் கட்சியின் சின்னம் ஆகியவைதான் இடம்பெற்று வருகின்றன.

மற்றொரு முக்கிய அம்சமாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் கண்காணிக்கப்பட உள்ளன. இதன் மூலம், இவிஎம் இயந்திரங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் எளிதில் கண்காணிக்க இயலும்.

அத்துடன், நாடு முழுவதும் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும், ஒரு வாக்குச்சாவடி பெண் காவலர்கள், பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பின் கீழ் இருப்பது கட்டாயமாக்கப்பட உள்ளது.

 மேலும், வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடிகளில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெறுவதாக வாக்காளர்களின் கவனத்துக்கு வந்தால், அதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு புகார் அனுப்ப, மொபைல் செயலியை தேர்தல் ஆணையம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள், ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் செய்யும் விளம்பரங்களும் முறையாக ஆய்வு செய்யப்பட உள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக, தாங்கள் வாக்களித்த வேட்பாளருக்கு தான் தங்களின் வாக்குப் பதிவாகி உள்ளதா என்பதை உறுதி செய்வதற்கான வாக்காளர் ஒப்புகைச் சீட்டு வழங்கும் முறை, நாட்டிலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வரும் மக்களவைத் தேர்தலில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில், இந்த ஒப்புகைச் சீட்டு முறை, நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் மட்டும் பரிசோதனை முறையில் செயல்படுத்தப்பட்டது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close