அரசியலுக்காக ராணுவத்தை கேவலப்படுத்தாதீர்: ரவிசங்கர் பிரசாத் காட்டம் 

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 04:06 pm
don-t-abuse-army-ravishankar-prasad-to-rahul

மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு சட்ட திட்டங்களையும், விதிமுறைகளையும் மீறிவிட்டதாக காங்., தலைவர் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், நாட்டின் பாதுகாப்பிற்காக விமானப்படை நடத்திய துல்லிய தாக்குதலின் மீது சந்தேகம் எழுப்பி, காங்கிரசார், நாட்டை காக்கும் வீரர்களை கேவலப்படுத்துகின்றனர் என, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார். 

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது: 
மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு சட்ட திட்டங்களை மதிக்க தவறியதாக, காங்கிரசார் குற்றம்சாட்டியுள்ளனர். விதிமுறைகளை மீறியது பா.ஜ., அல்ல; காங்கிரசாரே. தேர்தல் கமிஷன் மீது சந்தேகம் எழுப்பியது யார்? ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம் எழுப்பியது யார்? 

இப்படி சட்ட விதிகளின் படி செயல்படும் முறையான துறைகள் மீதே சந்தேகப்படும் இவர்கள், நேர்மையான அதிகாரிகளையும், அந்த துறையையும் கேவலப்படுத்துகின்றனர். 

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு, நாட்டின் ராணுவத்தின் மீதே சந்தேகம்.  பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம் மீது, விமானப்படை நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து, காங்., தலைவர் ராகுல் மற்றும் ஜம்மு - காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஒருவர் ஆகியோர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். அதற்கு ஆதாரம் கேட்கின்றனர்.

இதன் மூலம் அவர்களுக்கு பாகிஸ்தான் மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கலாம். ஆனால், நீங்கள் நாட்டின் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள வீரர்களின் செயல்படாட்டில் சந்தேகம் எழுப்பி, நாட்டை கேவலப்படுத்துகிறீர்கள்.

நாட்டில் பல தேர்தல்கள் வரலாம். கட்சிகள் இன்று ஆட்சியில் இருக்கலாம் நாளை போகலாம். ஆனால், நாடு நிலையானது. நாட்டின் ராணுவம் நிலையானது. நாட்டின் பாதுகாப்பு மிக மிக அவசியமானது. எனவே, நாட்டை கேவப்படுத்தும் செயலில் ஈடுபடாதீர். 

தேர்தல் நடப்பதால், ரம்ஜான் பாதிக்கப்படுவதாக கூறுகிறார்கள். முந்தைய தேர்தல்களின் போது, ஹோலி, நவராத்திரி போன்றவையும் வரத்தான் செய்தன. தேர்தல் காலங்களில் பண்டிகைகள் வருவது இயல்புதான். அதனால், பண்டிகைகளுக்கு எந்த தடையும் ஏற்படாது. 

சரியாக ரம்ஜான் கொண்டாடப்படும் நாளில் ஓட்டுப்பதிவு நடக்கவில்லை. எனவே, மக்களை திசை திருப்பும் நடவடிக்கைகளை மேற்கு வங்க முதல்வர் மம்தா போன்றோர் கைவிட வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close