தேர்தலில் போட்டியில்லை: சரத் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 04:17 pm
i-will-not-contest-in-loksabha-polls-sharad-pawar

வரும் லோக்சபா தேர்தலில், தான் போட்டியிடப்போவதில்லை என, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். 

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், 78.  இவர், ஏற்கனவே, பல முறை தேர்தலில் களம் கண்டவர். மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பவார், அந்த மாநில முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 

தேசிய அளவில்  முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான இவர், வரும் லோக்சபா தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார். 

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய பவார், ‛‛நான் ஏற்கனவே, 14 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். என் குடும்பத்தை சேர்ந்த இருவர், தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. எனவே, வரும் லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை’’ என அவர் கூறியுள்ளார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close