சும்மா இருக்கும் சங்கை ஊதி கெடுக்கிறதா தேர்தல் கமிஷன்?

  பாரதி பித்தன்   | Last Modified : 11 Mar, 2019 05:48 pm
special-article-about-election

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. கடந்த லோக்சபா தேர்தலில், 81 கோடியே 45 லட்சம் பேர் ஓட்டு போட்டு இருக்கிறார்கள். பல தேர்தலுக்கு முன்பு, டன் கணக்கில் பேப்பர்களை செலவு செய்து வாக்குச்சீட்டு அச்சடித்து தேர்தல் நடத்தப்பட்டது. இதை எண்ணி முடிப்பது, பின்னர் பாதுகாப்பது மிகப் பெரிய வேலை. இதன் காரணமாக, படிப்படியாக எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 

கள்ள ஓட்டு உட்பட, பல விஷயங்களுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உதவாத காரணத்தால், அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இவற்றில் பல, சிறுபிள்ளைத் தனமான காரணங்கள். எந்த பொத்தானை அழுத்தினாலும், குறிப்பிட்ட சின்னத்திற்கு ஓட்டு விழுவதாக கூறினர். 

 முதல், 10 ஓட்டு ஒரு சின்னத்திற்கு, 11வது ஓட்டு வேறு ஒன்றுக்கு, அடுத்த, 10 ஓட்டு முதல் சின்னத்திற்கு என்று எல்லாம் குற்றச்சாட்டு கூறப்பட்டது. சிலர் செப்படி வித்தைகள் காட்டி, ஓட்டு இயந்திரம் ஊழலுக்கு தான் வழிவகுக்கும் என்று கூறி, ஓவர் நைட்டில் ஒபமா ஆகிறார்கள். 

இந்த பிரச்னைக்கு முடிவுகட்ட, தேர்தல் கமிஷன் நிரந்தர தீர்வு காண முயற்சி செய்து, ஓட்டு பதவிவை சரிபார்க்க ஒரு இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது. ஒருவர் ஓட்டுப் போடும் போது, அவர் எந்த சின்னத்திற்கு ஓட்டு போடுகிறார் என்பதற்கான ரசீது தோன்றி, மீண்டும் அது பெட்டியில் விழுந்து விடும். 

இதில் தான் பிரச்னையே தொடங்குகிறது. அரசியல் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள், யார் தன் கட்சிக்கு ஓட்டு போடுவார், யார் மாற்றுக்கட்சிக்கு ஓட்டுப் போடுவார் என்று இயல்பாகவே அறிந்துவிடுவார். அவருக்கு இது மேலும் ஒரு ஆவணமாக மாறிவிடும். 

பழைய மாதிரியே டன் கணக்கில் பேப்பர் செலவு வேறு. யாரேனும் வழக்கு தொடர்ந்தால், அத்தாட்சியாக காண்பிக்க, இந்த ரசீதுகளை வேறு பாதுகாக்க வேண்டும். தேர்தல் கமிஷன் என்பது தேர்தல் நேரத்தில் மட்டுமே அதிகாரம் கொண்டது. அதன் பின்னர் ஆட்சிக்கு வருபவர், இந்த ரசீதுகளை பார்த்து அல்லது கைபற்றி, அதில் முறைகேடுகள் செய்யவும் வாய்ப்புள்ளது. 

மேலும் சிலர், பெட்டியில் உள்ளே செல்லும் முன்பே, ரசீதை கிழித்து கை எடுக்க வாய்ப்பு உள்ளது. அப்படி கிழித்தால் மீண்டும் அந்த இயந்திரத்தை இயங்க வைக்க, தேர்தல் அலுவலருக்கு பயிற்சி இருக்கிறதா என்பதும் சந்தேகமே. மேலும், தவறான குற்றச்சாட்டு கூறினால்,  3 ஆண்டு சிறை என்று ஓட்டு போடுகிறவர் மிரட்டப்படுகிறார். ஆனால் அவர் கூறும் குற்றச்சாட்டு உண்மையா, பொய்யா என்று எப்படி கண்டுபிடிப்பது?

இதற்கு பதிலாக வேறு எளிதான முறை உள்ளது. அது, பேப்பரில் ரசீது வழங்குவதற்கு பதிலாக, சம்பந்தப்பட்ட மிஷினில், வெளிப்படையாக டிஸ்பிளே மட்டும் தோன்றி, ஒரு சில வினாடிகள் கழித்து மறையலாம். இதை, சம்பந்தப்பட்ட கருவியிலேயே பதிவு செய்தால், தேவையில்லாமல் பேப்பரை சுமக்க வேண்டியது இல்லை. 

மேலும், எதிர்காலத்தில் தனி நபர் வழக்கு தொடுத்தால், அந்த கருவியை மட்டும் கோர்ட்டில் சமர்ப்பித்தால் போதும். விநாடி நேரத்தில் இதை சரிபார்க்க முடியும். சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப வல்லுனரை தவிர யாரும் அதை பார்க்க முடியாது. 
இந்த முறையால் தேவையற்ற பிரச்சனைகளை தடுக்க முடியும். ஒட்டு பதிவின் மீதும் நம்பகத்தன்மையை உறுதி செய்ய முடியும். அதை விடுத்து, தற்போது நடைமுறைப்படுத்தப்பட உள்ள நடைமுறை தேவையில்லாத விவகாரங்களை கிளப்புமோ. என்ற ஐயப்பாட்டை எழுப்புகிறது. எனவே தேர்தல் கமிஷன் எதிர்காலத்தில் இந்த முறையை அறிமுகம் செய்ய முன் வர வேண்டும். 

இது ஏதோ, அரசின், தேர்தல் கமிஷனின் நடவடிக்கையை குறை கூறும் அல்லது விமர்சிக்கும் வகையில் கூறவில்லை. ஜனநாயக நாட்டில், ஜனநாயக ரீதியில் நடைபெறும் தேர்தலில் முறைகேடு நடைபெறாமல் இருக்க, ஒரு ஜனநாயக பிரஜையின் எண்ணத்தில் உதித்த கருத்துக்களே இங்கு முன்வைக்கப்படுகின்றன. நாட்டில் கருத்து சுதந்திரம் உயிர்ப்புடன் உள்ளது என்ற நம்பிக்கையில் இந்த கருத்துக்கள் தைரியமாக முன் வைக்கப்படுகின்றன. 

newstm.in
இந்த கட்டுரையில் வரும் அனைத்து கருத்துக்களும் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close