அரசியலில் இஸ்லாத்தை இழுக்க வேண்டாம்: அசாதுதீன் ஒவைஸி அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 11:27 am
don-t-bring-islam-into-your-politics-asaduddin-owaisi

ரம்ஜான் மாதத்தில் தேர்தல் வருவதை விமர்சித்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவருக்கு பதிலடி தரும் வகையில் பேசிய ஹைதராபாத் எம்.பி அசாதுதீன் ஒவைஸி, "உங்கள் அரசியலில் இஸ்லாத்தை இழுக்காதீர்கள்" என்று கூறியுள்ளார்.

ஏப்ரல் 11 -ஆம் தேதி முதல் மே மாதம் 19 -ஆம் தேதி வரை, நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், கொல்கத்தா மாநகரமேயருமான ஃபிர்ஹத் ஹக்கீம், "ரம்ஜான் மாதத்தில் தேர்தல் வருவது இஸ்லாமிய மக்களுக்கு கடினமானதாக இருக்கும்" என விமர்சனம் எழுப்பியிருந்தார். 

இதுகுறித்து கேட்டதற்கு ஹைதராபாத் எம்.பி-யும், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஒவைஸி, "இது தேவையில்லாத சர்ச்சை" என்று விமர்சனம் செய்துள்ளார்.

ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பிருந்தாலும், அலுவலகம் செல்வது உள்ளிட்ட அனைத்து தினசரி வேலைகளையும் செய்து வருகின்றனர். என்னை பொறுத்தவரை மற்ற வேலைகளில் இருந்து விடுபடுவதால், இந்த மாதத்தில் இஸ்லாமியர்களின் ஓட்டு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறுவேன். அரசியல் கட்சிகள் இஸ்லாமையும், ரம்ஜானையும் தங்கள் லாபத்திற்காக பயன்படுத்தாதீர்கள்" என அவர் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close