டெல்லியில் காங்கிரஸ் தனித்து போட்டி: ராகுல் அதிரடி

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 07:31 pm
congress-will-contest-alone-in-delhi

லோக்சபா தேர்தலில், டெல்லியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என, அந்த கட்சியின் தேசிய தலைவர் ராகுல் அறிவித்துள்ளார். 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் தங்கள் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து பேச்சு நடப்பதாக கூறினார். இதற்கு, காங்., தலைவர் ராகுலும் சம்மதம் தெரிவித்ததாகவே கூறப்பட்டது. 

எனினும், டெல்லியில், தனித்து போட்டியிடுவதே சிறந்தது என, காங்., மாநில தலைமை கருதியது. இதனால் கோபமடைந்த கெஜ்ரிவால், அந்த கட்சியின் சார்பில் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். எனினும், இரு கட்சிகளிடையே கூட்டணி அமையலாம் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில், காங்., தலைவர் ராகுல் இன்று தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை விளக்கினார். அதன் படி, டெல்லியில் உள்ள ஏழு லோக்சபா தொகுதிகளிலும், காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என அறிவித்தார். 

இதன் மூலம், லோக்சபா தேர்தலில், உத்தர பிரதேசம் மட்டுமின்றி, டெல்லியிலும், காங்கிரஸ் கட்சி தனித்து களம் காணும் சூழல் உருவாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close