புரி தொகுதியில் போட்டியிடுகிறாரா பிரதமர் மோடி?

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 11:59 am
pm-modi-likely-to-contest-from-puri-as-the-second-option-seat

ஒடிஸா மாநிலத்தில் புரி நாடாளுமன்றத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் பரவத் தொடங்கியுள்ளன. ஆனால், அவர் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பா.ஜ.க. மேலிடத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், குஜராத்தில் உள்ள வதோதரா தொகுதியிலும், உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதியிலும் போட்டியிட்டு, இரண்டிலும் மோடி வெற்றி பெற்றார். பின்னர் வதோதரா தொகுதியில் ராஜிநாமா செய்தார். பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலைக் கொண்ட புனித ஸ்தலம் வாரணாசி என்பதே, அவர் தொகுதியை தேர்வு செய்யக் காரணமாக இருந்தது. அதேபோன்று, தற்போதும் ஜெகந்நாதர் கோயிலைக் கொண்ட புனித ஸ்தலமான புரி தொகுதியில் இருந்து மோடி போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஆனால், மோடி வாரணாசி தொகுதியிலேயே போட்டியிட வேண்டும் என்று டெல்லியில் அண்மையில் நடந்து முடிந்த பா.ஜ.க. ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவிக்கின்றனர். அதே சமயம், மோடி போட்டியிடும் இரண்டாவது தொகுதியாக புரி அமையும் என்றும் கூறப்படுகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் மோடி போட்டியிடுவதன் மூலமாக, அத்தொகுதிகளைக் கொண்ட மாநிலங்களில் பலமான வெற்றி கட்சிக்கு கிடைக்கும் என்று பா.ஜ.க. கருதுகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close