கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பீர் பா.ஜ.க. சார்பில் போட்டி

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 12:49 pm
gautam-kambir-to-be-fielded-as-bjp-candidate-in-new-delhi

பிரபல கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பீர், பா.ஜ.க. சார்பிலான வேட்பாளராக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு தற்போது 37 வயது ஆகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸில் போட்டியிட்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை ஆதரித்து, நட்சத்திரப் பிரசாரகராக வாக்கு சேகரித்தவர் கௌதம் காம்பீர். அதன் பிறகு, நேரடி அரசியல் நடவடிக்கைகளில் அவர் பங்கேற்கவில்லை. எனினும், சமூகம் சார்ந்த விவாதாங்களில் பா.ஜ.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் அவர் கருத்து கூறி வந்தார். 

இந்நிலையில், டெல்லியில் உள்ள புது டெல்லி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக கௌதம் காம்பீர் களமிறக்கப்படவுள்ளார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அத்தொகுதியின் எம்.பி.யாக உள்ள மீனாட்சி லேஹி, வேறொரு தொகுதியில் போட்டியிடயிருப்பதாகவும் கூறப்படுகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

இதை மிஸ் பண்ணாதீங்க...

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close