வேலைவாய்ப்பு எங்கே? ரூ.15 லட்சம் எங்கே: குஜாரத்தில் பிரியங்கா

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 07:17 pm
ask-the-important-questions-priyanka-gandhi-in-gujarat

குஜராத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, பிரதமர் மோடி வாக்குறுதி அளித்த, வங்கி கணக்கில் ரூ.15 லட்சம், மற்றும் 2 கோடி வேலைவாய்ப்புகள் திட்டங்கள் பற்றி பொதுமக்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்றார். 

குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் உ.பி மாநில பொறுப்பாளர் பிரியங்கா காந்தி, பொதுமக்கள் சரியான கேள்விகளை கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். "கடந்த தேர்தலில் பிரதமர் அளித்த, வங்கி கணக்குகளில் 15 லட்சம்,  2 கோடி வேலைவாய்ப்பு உள்ளிட்ட திட்டங்கள் குறித்து மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும்" என்று கூறினார்.

மேலும், தற்போதைய நிலையில், நாட்டில் வெறுப்புணர்வு அதிகரித்து வருவதாக பிரியங்கா தெரிவித்தார். "நாட்டில் அதிகரித்து வரும் வெறுப்புணர்வை பார்த்தல் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. நாட்டின் கட்டமைப்புகள் உடைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், மக்களால் அன்பை கொண்டு இந்த வெறுப்பை நீக்க முடியும்" என்று கூறினார். 

"மற்ற எதைப் பற்றியுமே நாம் கருத வேண்டாம். பெண்கள் பாதுகாப்புக்காக, இளைஞர்களுக்காக, விவசாயிகளுக்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று கேட்டார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close