திரிணமூல் காங்கிரஸ் பட்டியலில் இரண்டு நடிகைகள்... 10 எம்.பி.க்களுக்கு முழுக்கு!

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 08:53 pm
trinamool-congress-list-includes-two-actresses

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 42 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் 10 நடப்பு எம்.பி.க்களின் பெயர்கள் விடுக்கப்பட்டு, இரண்டு சினிமா நடிகைகள் இடம் பெற்றுள்ளனர்.

அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களுக்கான நேர்க்காணலை நடத்தி பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். இதில் மேற்கு வங்கத்தின் ஆளும் கட்சியான திரிணமூல் காங்கிரஸ், தனித்து போட்டியிடும் நிலையில், 42 தொகுதிகளுக்குமான தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

இதில், தற்போது பதவியில் இருக்கும் 10 எம்.பி.க்களுக்கு இடம் கிடைக்கவில்லை. ஹார்வர்டு பல்கலை பேராசிரியர் சுகதோ போஸ் போட்டியில் இருந்து விலகியதால், அவரது ஜாதவ்பூர் தொகுதியில் பிரபல பெங்காலி நடிகை மிமி சக்ரபோர்த்தி போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல, பசீர்ஹத் தொகுதி எம்.பி இத்ரிஸ் அலி-க்கு பதிலாக, பிரபல நடிகை நுஸ்ரத் ஜஹான் போட்டியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் நடைபெற்ற மதக்கலவரத்தால் இத்ரிஸ் அலிக்கு இடம் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல, மொத்தம் 10 நடப்பு எம்.பி-க்கள் பெயர் பட்டியலில் இடம் பெறவில்லை. 

42 வேட்பாளர்களில், 17 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close