பாஜக தான் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் : அடித்துச் சொல்லும் காங்கிரஸ் கூட்டணி கட்சித் தலைவர் ! 

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 08:30 am
mp-election-ncp-chief-sharad-pawar-predicts-bjp-to-emerge-as-the-single-largest-party

வரும் மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று, பாஜக தான் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியில் பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என முழங்கிவரும் அரசியல் கட்சித் தலைவர்களில், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரான சரத் பவாரும் ஒருவர். வரும் மக்களவைத் தேர்தலில், மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தே காங்கிரஸ் அங்கு களம் இறங்க உள்ளது.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து சரத் பவார், மும்பையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, "2014 மக்களவைத் தேர்தலை போன்று, இந்தத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறாது. அதேசமயம், அந்தக் கட்சிதான் அதிக இடங்களில் வெற்றிப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும். பிற கட்சிகளின் ஆதரவுடன் பாஜகவே மீண்டும் ஆட்சியமைக்க அதிக வாய்ப்புள்ளது" என தமது கணிப்பை சரத் பவார் வெளிப்படையாக தெரிவித்தார்.

காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டே, பாஜகவுக்கு சாதகமாக சரத் பவார் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தோல்வியை, தேர்தலுக்கு முன்பே அவர் ஒப்புக்கொண்டது போல் உள்ளது என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close