தேர்தலில் சீட் வழங்க ரூ.90 லட்சம் வாங்கியுள்ளார் - கட்சித் தலைவர் மீது அதிரடி குற்றச்சாட்டு

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 10:25 am
upendra-kushwaha-asked-rs-90-lakh-for-allocating-seat-expelled-leader

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட சீட் வழங்குவதற்கு ரூ.90 லட்சம் பணம் வாங்கியுள்ளார் என்று பீகாரில் உள்ள ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியின் தலைவர் உபேந்திர குஷ்வாஹா மீது, அக்கட்சியில் இருந்து கடந்த வாரம் நீக்கப்பட்ட தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

பீகாரில் காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணியில் லோக் சமதா கட்சி இடம்பெற்றுள்ளது. அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரதீப் மிஷ்ரா, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி கடந்த வாரம் நீக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பிரதீப் மிஸ்ரா, பீகாரின் கிழக்கு சாம்பரான் தொகுதியில் தன்னை போட்டியிட வைப்பதற்காக, உபேந்திர குஷ்வாஹா ரூ.90 லட்சம் பணம் பெற்றுக் கொண்டார் என்று குற்றம்சாட்டினார். டெல்லியில், குஷ்வாஹாவுக்கு உள்ள வங்கிக் கணக்கில், இரண்டு தவணைகளாக அந்தப் பணம் செலுத்தியுள்ளதாகவும் பிரதீப் மிஸ்ரா தெரிவித்தார். தனது குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தேர்தலில் சீட் வாங்க பணம் கொடுத்தது தவறில்லையா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, கட்சி வளர்ச்சி நிதி என்ற பெயரிலேயே அந்தப் பணத்தை குஷ்வாஹா வசூலித்தார் என்றும், தன்னுடைய பணம் முறையான வழிகளில் சம்பாதிக்கப்பட்டது என்றும், அதுகுறித்து வருமான வரித்துறையினர் கணக்கு கேட்டால் சமர்ப்பிக்க தயார் என்றும் பிரதீப் மிஸ்ரா தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close