அஸ்ஸாமில் பா.ஜ.க. - ஏ.ஜி.பி. இடையே மீண்டும் மலர்ந்த கூட்டணி

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 10:52 am
assam-agp-again-returned-to-nda-alliance

அஸ்ஸாம் மாநிலத்தில், நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பா.ஜ.க. மற்றும் அஸ்ஸாம் கன பரிஷத் (ஏ.ஜி.பி.) ஆகிய கட்சிகளுக்கு இடையே கூட்டணி மலர்ந்துள்ளது.

பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ் மற்றும் ஏ.ஜி.பி. கட்சியின் தலைவர் பிரபுஃல்லா குமார் மஹந்தா ஆகியோர் நேற்றிரவு பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து கூட்டணி உறுதியானது. இதுகுறித்து ராம் மாதவ் செய்தியாளர்களிடம் பேசியபோது, ”அஸ்ஸாமில் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிக்கும் வகையில், பா.ஜ.க.வும், ஏ.ஜி.பி. கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட முடிவு செய்துள்ளன’’ என்று தெரிவித்தார்.

அஸ்ஸாமில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்த ஹிந்துக்களுக்கு, குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய பா.ஜ.க. மேற்கொண்ட சட்டத்திருத்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏ.ஜி.பி. கட்சி கடந்த ஜனவரி மாதம் கூட்டணியில் இருந்து வெளியேறியது. இந்நிலையில், மீண்டும் கூட்டணி மலர்ந்துள்ளது. அஸ்ஸாமில் கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 14ல் பா.ஜ.க. 7 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close