ராகுல் காந்தி, ஸ்டாலின், மம்தா உள்ளிட்டோருக்கு பிரதமரின் திடீர் வேண்டுகோள்!

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 11:17 am
pm-modi-urges-rahul-mamta-to-promote-voting-in-elections

நாடாளுமன்றத் தேர்தலில், பொதுமக்கள் வாக்களிப்பதை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

வரும் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி, மே 19ம் தேதி வரையில் 7 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, ராகுல் காந்தி, ஸ்டாலின், மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் இளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரது பெயர்களை குறிப்பிட்டு டுவிட்டரில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். அதில்,”நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்காளர்கள் திரண்டு வந்து வாக்களிப்பதை நீங்கள் ஊக்குவிக்க வேண்டும். வாக்கு சதவீதம் அதிகரிப்பதால் ஜனநாயகம் பலப்படும்’’ என்று கூறியுள்ளார்.

மற்றொரு டுவிட்டர் பதிவில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், கர்நாடக முதல்வர் குமாரசாமி, ஒ.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆகியோரது பெயர்களை குறிப்பிட்டு, வாக்குசதவீதத்தை அதிகரிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மோடி கேட்டுக் கொண்டுள்ளார். அதேபோல் ஹிந்தி திரைப்பட நட்சத்திரங்களான ரண்வீர் சிங், விக்கி கௌஷல் உள்ளிட்டோரிடமும், வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close