சபாஷ்...காங்கிரஸ்காரருக்கு எதிராக களமிறங்கும் முன்னாள் காங்கிரஸ்காரர் !

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 01:31 pm
karnataka-umesh-jadhav-will-contest-elections-from-kalaburagi-against-mallikarjun-kharge

கர்நாடக மாநிலம், கல்புர்கி மக்களவைத் தொகுதியில், காங்கிரஸ் மூத்தத் தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவை எதிர்த்து, உமேஷ்  ஜாதவ் போட்டியிடுவார் என மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் இது தமது விருப்பம் என்றும், இருப்பினும் உமேஷ் ஜாதவ் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சித் தலைமை தான் இறுதி முடிவு எடுக்கும் என்றும் எடியூரப்பா கூறியுள்ளார்.

காங்கிரஸ் எம்எல்ஏவான உமேஷ் ஜாதவ், அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் பாஜகவில் இணைந்தார் என்பதும், மல்லிகார்ஜுன கார்கே, தற்போது மக்களவை காங்கிரஸ் தலைவராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close