ஜெகன் மோகன் பெயரை நீக்குமாறு விண்ணப்பித்த மர்ம நபர் - அதிர்ச்சியடைந்த தேர்தல் அதிகாரிகள்

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 01:13 pm
ec-complaint-against-unknown-for-seeking-deletion-of-jagan-mohan-reddy-s-name-from-voter-list

ஆந்திராவில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் ஒ.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக் கோரி, அவரது பெயரிலேயே மர்ம நபர் விண்ணப்பம் தாக்கல் செய்திருப்பதைக் கண்டு தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடப்பா மாவட்டம், புலிவெந்துலா தொகுதியில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாக்குரிமை உள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில், படிவம்-7ல் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் ஒன்று வந்தது. ஜெகனின் புகைப்படம், சுய விவரம் உள்ளிட்டவை அதில் சரியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், தனது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து சந்தேகமடைந்த தேர்தல் அதிகாரிகள், ஜெகன் மோகனின் உதவியாளரை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது, இதுபோன்ற விண்ணப்பம் எதையும் தாங்கள் அளிக்கவில்லை என்று அந்த உதவியாளர் தெரிவித்தார். இதையடுத்து, ஜெகன் பெயரில் விண்ணப்பம் செய்த மர்ம நபர் குறித்து காவல்நிலையத்தில் தேர்தல் அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்பட்டையில், அந்த மர்ம நபரை காவல்துறை தேடி வருகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close