தந்தை காங்கிரஸ் கட்சி... பாஜகவில் இணைந்த மகன்... இது எப்படி இருக்கு?

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 04:03 pm
father-in-congress-son-joined-in-bjp

மகாராஷ்டிர மாநில மூத்த காங்கிரஸ் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ராதாகிருஷ்ண விகேபாட்டீலின் மகன், சுஜய் விகே பாட்டீல் பாஜகவில் இணைந்துள்ளார். மாநில முதல்வர் தேவேந்திர  ஃபட்னவீஸ் தலைமையில், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  சுஜய், பாஜகவில் இணைந்தார்.

மகாராஷ்டிர மாநிலத்தில், காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை சந்திக்க உள்ளன. இக்கூட்டணியில், அகமது நகர் மக்களவைத் தொகுதி, தேசியவாத காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் அதிருப்தியடைந்த சுஜய் விகே பாட்டீல், பாஜகவில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

"அகமது நகர் தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பளிக்குமாறு பாஜகவின் வேட்பாளர் தேர்வுக்குழுவுக்கு பரிந்துரைக்கப்படும்" என்று முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close