நாடாளுமன்றத் தேர்தலில் ப்ரியங்கா காந்தி போட்டியிடமாட்டார்..?

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 06:12 pm
priyanka-gandhi-vadra-will-not-contest-the-national-election-sources

2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி போட்டியிட மாட்டார் என்றும் அவர் காங்கிரஸ் கட்சிப்பணிகளில் மட்டுமே ஈடுபடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் மகளும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியுமான ப்ரியங்கா  காந்தி இதுவரையில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்காகவும் மட்டுமே தேர்தல் சமயங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

ஆனால், முதல் முறையாக ப்ரியங்கா காந்திக்கு கடந்த ஜனவரி மாதம் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது.அவருக்கு பொதுச் செயலாளர் பொறுப்பினை அளித்து, உத்திரப் பிரதேசம் கிழக்குப்பகுதி தேர்தல் பணிகளை கொடுத்தது காங்கிரஸ் கட்சி. 

இதையடுத்து நேற்று குஜராத் மாநிலம் காந்திநகரில் நடந்த காங்கிரஸ் பேரணியில் முதன் முறையாக உரையாற்றினார். அப்போது, "பாஜக அரசு மக்களின் வங்கிக்கணக்கில் செலுத்துவதாக கூறிய ரூ.15 லட்சம் எங்கே? இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு எங்கே? பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே?" என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார். 

இதையடுத்து அவர் அரசியலில் முழுவதுமாக இறங்கிவிட்டார், வருகிற தேர்தலில் போட்டியிடுவார் என்றே கணிக்கப்பட்ட நிலையில், அவர் தேர்தலை போட்டியிட மாட்டார் என சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் தனது சகோதரர் ராகுல் காந்தி மற்றும் தாயார் சோனியா காந்திக்காக மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close