பா.ஜ.,வை மிரட்டும் உன்னாவ் எம்.பி., சாக்ஷி மஹாராஜ்!

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 07:48 pm
result-may-not-be-good-if-sakshi-maharaj-s-veiled-threat-to-bjp

வரும் லோக்சபா தேர்தல் உன்னாவ் தொகுதியில் தன்னை தவிர வேறு நபருக்கு சீட் கொடுத்தால், மாநிலம் முழுவதும் தேர்தல் முடிவுகள் வேறு வகையில் இருக்கும் என, பா.ஜ., எம்.பி., சாக்ஷி மஹாராஜ் கட்சித் தலைமைக்கு மிரட்டல் விடுத்துள்ளார். 
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் தொகுதி எம்.பி., சாக்ஷி மஹாராஜ். இவர்கள், 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், இந்த முறை, உன்னாவ் தொகுதியில் வேறு வேட்பாளர் களம் இறக்கப்படலாம் என தகவல் வெளியானது. 

இதையடுத்து, கட்சியின் மாநில தலைமைக்கு, சாக்ஷி மஹாராஜ் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், உன்னாவ் தொகுதியில் தன்னை தவிர வேறு வேட்பாளருக்கு வாய்ப்பளித்தால், அது, மாநிலம் முழுவதும் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என, மிரட்டும் வகையில் எழுதியிருந்தார். 
இந்த கடிதம், ஊடகங்களில் கசிந்ததை அடுத்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் கட்சி எம்.பி., ஒருவர், அந்த கட்சித் தலைமையை மிரட்டும் வகையில் கடிதம் எழுதியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close