கர்நாடகாவில் காங்கிரஸ் - ம.ஜ.த. இடையே கூட்டணி உடன்பாடு

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 10:25 am
seat-sharing-finalised-in-cong-jdu-alliance-in-karnataka

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, கர்நாடகத்தில் ஆளும், மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கட்சிகள் இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 20 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 8 இடங்களிலும் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் மொத்தம் 28 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. தொகுதிகளை பிரித்துக் கொள்வது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே தொடர் இழுபறி நீடித்து வந்தது. இதற்கிடையே, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவ கௌடா மற்றும் முதல்வர் குமாரசாமி ஆகியோரைச் சந்தித்து ராகுல் காந்தி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும், ஒரு சில தொகுதிகளை பிரித்துக் கொள்வதில் உடன்பாடு எட்டப்படாமல் இருந்தது. குறிப்பாக, மைசூரு - குடகு தொகுதிக்கு இருகட்சிகளுக்கும் இடையே போட்டா, போட்டி நிலவியது. இறுதியில் அத்தொகுதி காங்கிரஸுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஷிமோகா, தும்கூர், ஹஸன், மாண்டியா, பெங்களூரு வடக்கு, உத்தர கன்னடா, சிக்மகளூரு, விஜயபுரா ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேவ கௌடாவின் மூத்த மகன் ரேவண்ணா அமைச்சராகவும், இளைய மகன் குமாரசாமி முதல்வராகவும் உள்ளனர். இந்நிலையில், அவர்களது இருவரது மகன்களையும் தேர்தலில் போட்டியிட வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்து வருகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close