ஊழல் கறையுடன் தேர்தலில் போட்டியிடத் தயாராகும் காங்கிரஸ் தலைவர்!

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 10:53 am
congress-leader-naveen-jindal-got-court-permisssion-to-contest-elections

நிலக்கரி ஊழல் வழக்கில் வழக்கு விசாரணையை எதிர்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவரும், தொழிலதிபருமான நவீன் ஜிண்டால், தேர்தலில் போட்டியிட நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளார். அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜார்க்கண்ட் மாநிலம், அமர்கோண்டாவில் ஜிண்டால் ஸ்டீல் பவர் லிமிடெட் மற்றும் ககன் ஸ்பான்ஞ் ஐயன் லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்களுக்கு நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதுதொடர்பாக, நவீண் ஜிண்டால், முன்னாள் முதல்வர் மதுகோடா, முன்னாள் அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. அதேபோன்று, மத்தியப் பிரதேச மாநிலத்திலும் முறைகேடான வழியில் சுரங்க ஒதுக்கீட்டைப் பெற்றதாக ஜிண்டால் மீது குற்றச்சாட்டு உள்ளது.

இந்த இரு வழக்குகளும், டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இரண்டாவது வழக்கில், ஜிண்டால் உள்பட பலருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, அவர் ஜாமீன் பெற்று வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில், தேர்தலில் போட்டியிட இருப்பதால், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்று, ஜூன் 30 வரையில் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு விலக்கு அளித்து, நீதிபதி பரத் பராஷர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

ஹரியாணா மாநிலம், குருஷேசத்ரா தொகுதியில் போட்டியிடவிருப்பதாக ஜிண்டால் கூறியுள்ளார். ஆனால், காங்கிரஸ் கட்சி அவருக்கு வாய்ப்பு அளிக்கிறதா என்பது உறுதியாக அறிவிக்கப்படவில்லை.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close