பீகார் - மகா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதியானது

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 11:28 am
seat-sharing-consensus-arrived-in-mahatbhandhan-alliance-in-bihar

பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா கூட்டணியில் தொகுதி உடன்பாடு ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

மொத்தம் 40 தொகுதிகளைக் கொண்டது பீகார் மாநிலம். இங்கு ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க. கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. அவ்விரு கட்சிகளும் தலா 17 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. பா.ஜ.க. கூட்டணியில் உள்ள ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த அணிக்கு மாற்றாக மகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.  பிரதான எதிர்க்கட்சியான, லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி, காங்கிரஸ் மற்றும் இதர சிறிய கட்சிகள் இணைந்து அந்தக் கூட்டணியை அமைத்துள்ளன.

இதில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் 11 தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக, கூட்டணி பேச்சுவார்த்தையில் பங்கேற்ற மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட், ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு மீதமுள்ள தொகுதிகளை பிரித்து அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close