31 சதவீத ஓட்டுகள்; தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி!

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 04:23 pm
bjp-sets-new-record-on-2014-election

கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், மாெத்தம் பதிவான ஓட்டுகளில், 31 சதவீத ஓட்டுகளை பெற்ற பாரதிய ஜனதா கட்சி, 51 சதவீதத்திற்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று, மத்தியில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. 

கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், நாடு முழுவதும், 83 கோடியே, 41 லட்சத்து, ஆயிரத்து, 479 பேர் ஓட்டளிக்க தகுதியுடையவர்களாக, தேர்தல் கமிஷன் அறிவித்தது. 

இவர்களில், 55 கோடியே 38 லட்சத்து, ஆயிரத்து, 801 பேர் தேர்தலில் ஓட்டளித்தனர். இது, மொத்த வாக்காளர்களில், 66.4 சதவீதம் ஆகும். 

நாடு முழுவதும் மாெத்தம், 428 தொகுதிகளில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி, 17 கோடியே, 16 லட்சத்து, 60 ஆயிரத்து, 230 ஓட்டுகள் பெற்றது. இது, மாெத்தம் பதிவான வாக்குகளில், 31 சதவீதம் ஆகும். இதன் மூலம், 282 தொகுதிகளில் அந்த கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இது, மொத்த தொகுதிகளில், 51.93 சதவீதம் ஆகும். இது, அந்த கட்சிக்கு, மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான தனிப் பெரும்பான்மையை பெற்று தந்தது. 

இதன் மூலம், சுதந்திரத்திற்கு பின், காங்கிரஸ் அல்லாத ஒரு அரசியல் கட்சி, மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான தனிப் பெரும்பான்மை பெற்ற புதிய வரலாறு படைக்கப்பட்டது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close