சீன அதிபரைக் கண்டு பயப்படுகிறார் மோடி: ராகுல் காந்தி விமர்சனம்

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 12:47 pm
modi-scared-of-to-question-chinese-president-rahul-gandhi-tweets

சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பார்த்து பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு காரணமான, பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரும் தீர்மானம் ஐ.நா.வில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் வீட்டோ அதிகாரம் பொருந்திய சீனா, அந்த தீர்மானத்தை ஆராய கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாக கடைசி நிமிடத்தில் கூறியதால், அந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. மோடி அரசின் ராஜீய நடவடிக்கைகள் தோல்வி அடைந்திருப்பதைத்தான் இது உணர்த்துகிறது என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

அதேபோன்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பிரதமரை விமர்சித்துள்ளார். சீன அதிபர் குஜராத் மற்றும் டெல்லிக்கு வந்தபோது பிரதமர் மோடி அளித்த விமரிசையான வரவேற்பு குறித்தும் அவர் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில், “பலவீனமான மோடி சீன அதிபரைக் கண்டு அஞ்சுகிறார். சீனா இந்தியாவுக்கு எதிராக செயல்படும்போது, அவர் ஒரு வார்த்தை கூட பேச மறுக்கிறார். சீனா குறித்த மோடியின் வெளியுறவுக் கொள்கை என்னவென்றால், குஜராத்தில் ஜின்பிங்கை வாஞ்சையாக வரவேற்பது, டெல்லியில் அவரை அரவணைப்பது, இறுதியாக ஜின்பிங்கிற்கு அடிபணிவது எனபதுதான்’’ என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close