சோனியாவுக்கு நெருக்கமானவர் பா.ஜ.,வில் ஐக்கியம் 

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 02:38 pm
sonia-s-key-aid-vadakkan-joins-bjp

காங்., முன்னாள் தலைவர் சாேனியாவின் அரசியல் ஆலோசகராகவும், கட்சியின் முக்கிய தலைவருமாக இருந்த, டாம் வடக்கன், அந்தக் கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார். 

கேரள மாநிலம் திரிச்சூரை சேர்ந்தவர், டாம் வடக்கன். அந்த மாநில அரசியல் தலைவர்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதப்படும், இவர், 30 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரசில் பணியாற்றி வந்தார்.

அந்த கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாவுக்கு மிக நெருக்கமானவராகவும், முக்கிய அரசியல் ஆலோசனைகள் வழங்கியும் வந்தார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளராகவும், அகில இந்திய அளவில் அந்த கட்சியில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராகவும் விளங்கினார். 

இந்நிலையில், காங்கிரசிலிருந்து விலகுவதாக அறிவித்த வடக்கன், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தலைமையில் இன்று, பா.ஜ.,வில் இணைந்தார்.

வடக்கனின் இந்த முடிவு, வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பை பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரிச்சூர் மட்டுமின்றி, மாநிலத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள தேவாலயங்கள் மற்றும் அங்குள்ள பிஷப்புகளுடன் வடக்கன் நெருங்கிய தாெடர்புடையவர் என்பது  குறிப்பிடத்தக்கது. 


காங்கிரஸ் தலைமை, சில நாட்களாக தொடர்ந்து, தேச நலனுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும், அது பிடிக்காமல் தான் அந்த கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்ததாகவும் வடக்கன் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். 

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாக்., ஆதரவு தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்த, நம் விமானப்படையின் செயல்பாட்டை, காங்கிரஸ் கட்சியினர் விமர்சிப்பது தேச நலனுக்கு எதிரானது எனவும், காங்கிரஸ் தலைமையின் செயலால், தான் மிகவும் மன வேதனைக்கு ஆளாகியிருப்பதாகவும் வடக்கன் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close