தேசத்திற்கு எதிராக செயல்படுகிறார் ராகுல்: ரவிசங்கர் பிரசாத் காட்டம் 

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 02:50 pm
rahul-s-words-are-against-the-nation-ravishankar-prasad

சீன அதிபர் ஜீ ஜின் பிங்கை பார்த்து, பிரதமர் நரேந்திர மாேடி பயப்படுகிறார் என, டுவிட்டரில் பதிவிட்ட காங்., தலைவர் ராகுலுக்கு, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது:  ‛‛தேசிய அளவில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதில், மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு எதிராக, காங்., தலைவர் ராகுல் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். 

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் கூட, அரசுக்கு எதிராக பேச வேண்டும் என்ற அவசியம் அவருக்கு எழுந்துள்ளதா? துணிவற்ற பிரதமர் என்ற வகையில், பிரதமர்  மாேடிக்கு எதிராக, ராகுல் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். 

டோக்லாம் சர்ச்சை நடைபெற்ற போது, ராகுல் சீனாவுக்கு சென்று வந்தார். அதையும் அவரே தன் வாயால் ஒப்புக்கொண்டார். சீனாவுடன் இவ்வளவு நல்ல உறவு வைத்திருக்கும் ராகுல், பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் அதை ஏன் பயன்படுத்தக் கூடாது. இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதம் குறித்து, அவர்களிடம் ஏன் பேசக்கூடாது. 

பயங்கரவாதி மசூத் அசாருக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா.,வில் ஆதரிக்க சீனா மறுக்கிறது. ராகுல் அவர்களிடம் பேசி, அதை சம்மதிக்க வைக்கலாமே. அதை விடுத்து, சிறுபிள்ளைத்தனமாக பிரதமரை விமர்சிக்கிறார். 

மானசரோவர் பயணத்தின் போது கூட, சீன அமைச்சர்கள் பலருடன் தொடர்பில் இருப்பதாக கூறினார். சீனாவுடன் உங்களுக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கலாமே. 

நீங்கள் டுவிட்டர் மூலம் அரசியல் செய்யலாம் என்ற எண்ணத்தை கைவிடுங்கள். மசூத் அசாருக்கு ஆதரவான கருத்துக்களை  பதிவிடுகிறீர்கள். மத்திய அரசின் வெளிநாட்டு கொள்கை மீது சந்தேகப்படும் வகையில் பதிவிடுகிறீர்கள். நாட்டின் துயரத்தை அவர் டுவிட்டரில் கொண்டாடுகிறார். 

ஐக்கிய நாடுகள் சபையில், இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்த்து தர, நேரு மறுப்பு தெரிவித்தார். அதற்கு பதிலாக, சீனாவுக்கு அதை தர பரிந்துரைத்தார். இது குறித்த தகவல்களை, காங்கிரசை சேர்ந்த எம்.பி., தான் எழுதிய புத்தகத்திலேயே குறிப்பிட்டுள்ளார். 

காங்கிரஸ் கட்சியினரின் உண்மை ஸ்வரூபம் இதுதான் என்பது எல்லாருக்கும் தெரிந்துள்ளது. இனியும், நீங்கள் தேச நலனில் அக்கறை செலுத்துவது போல் நடிக்க முடியாது’’ இவ்வாறு அவர் பேசினார். 
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close