முன்னாள் பிரதமரின் பேரனும் அரசியலுக்கு வந்தாச்சு!

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 03:57 pm
hd-devegowda-launched-the-poll-campaign-for-grandson-prajwal-revanna

நாட்டின் முன்னாள் பிரதமரும், கர்நாடக மாநில முன்னாள் முதல்வருமான தேவகவுடா, தன் பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவை, ஹசன் தொகுதியில் வேட்பாளராக களம் இறக்கியுள்ளார். இதன் மூலம், தாத்தா, அப்பா, சித்தப்பா என்ற வரிசையில், தற்போது, பேரனும் அரசியல் பிரவேசம் செய்துள்ளார். 

கர்நாடகாவை சேர்ந்தவர், ஹெச்.டி.தேவகவுடா, 86. காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தன் அரசியல் பயணத்தை துவங்கிய இவர், ஜனதா கட்சியில் முக்கிய தலைவராக விளங்கினார். கர்நாட மாநில முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்த தேவகவுடா, மதசார்பற்ற ஜனதாதளத்தை துவங்கி, நாட்டின் பிரதமராகவும் உயர்ந்தார். 

காங்கிரஸ் மற்றும், பா.ஜ.,வால் தனித்து ஆட்சி அமைக்க முடியாத சூழலில், இவர் பிரதமர் ஆனார். எனினும், மத்தியில் ஸ்திரமான ஆட்சி அளிக்க முடியாத இவரது அரசு, 11 மாதங்களில் கவிழ்ந்தது. அதன் பின், தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். 

தன் மகன்கள், ரேவண்ணா மற்றும் குமாரசாமியை அரசியலில் நுழைத்து, அவர்களில் ஒருவரை மாநில முதல்வராகவும், மற்றொருவரை, அமைச்சராகவும் ஆக்கிய தேவகவுடா, தற்போது, தன் பேரனையும் அரசியலில் களம் இறக்கியுள்ளார். 

மூத்த மகன் ரேவண்ணாவின் மகனான, பிரஜ்வால் ரேவண்ணாவை, ஹசன் தொகுதியில் போட்டியிட வைப்பதாக அவர் அறிவித்துள்ளார். கட்சி பொதுக்கூட்டத்தில், தன் பேரனை அறிமுகம் செய்து வைத்த தேவகவுடா, தான் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த ஹசன் தொகுதியில், இம்முறை தனக்கு பதிலாக, பிரஜ்வால் போட்டியிடுவார் எனவும் அறிவித்துள்ளார். 

கர்நாடக மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் தங்கள் குடும்பம் முழுவதும் அரசியலில் ஈடுபட்டுள்ள நிலையில், தான் குடும்ப அரசியல் செய்வதாக, எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே பழிசுமத்துகின்றனர் என, கண்ணீர் வடித்தார். அவர் அழுததை பார்த்து, அவரது பேரனும் கண்ணீர் சிந்தினார்.

அதுமட்டுமின்றி, முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியையும், தேர்தலில் போட்டியிட வைப்பதற்கான பணிகள் தீவிர கதியில் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. கர்நாடகாவில் உள்ள, 28 லோக்சபா தொகுதிகிளில், காங்., 20 மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் 8 தொகுதிகளில் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன. 

இதில், ஹசன் மற்றும் மாண்டியா தொகுதிகள், தங்கள் கட்சிக்கு சாகமாக இருக்கும் என நினைப்பதால், ஹசனில் ஒரு பேரனையும், மாண்டியாவில் இன்னொரு பேரனையும் களம் இறக்க திட்டமிட்டுள்ளார் தேவகவுடா. 

இதன் மூலம், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, கர்நாடகாவிலும், தலைமுறை தலைமுறையாக குடும்ப அரசியல் செய்ய முடியும் என்பதை, தேவகவுடா நிரூபித்துள்ளதாக, அரசியல் விமர்சகர்கள் கிண்டலடித்துள்ளனர். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close