ராகுலுக்கு எதிராக களமிறங்கும் அகிலேஷ்?

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 08:05 pm
mayawati-tells-akhilesh-yadav-to-contest-from-rahul-gandhi-s-constituency-amethi

உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக களமிறங்க வேண்டுமென்று அகிலேஷ் யாதவை, மாயாவதி கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் மக்களவைத் தேர்தலில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

 இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளரான பிரியங்கா வதேரா,  பீம் ஆர்மி எனப்படும் தலித் அமைப்பின் தலைவரான சந்திரசேகர் ஆசாத் ராவனை, மீரட் நகரில் நேற்று சந்தித்து பேசினார்.

மக்களவைத் தேர்தல் நேரத்தில் நிகழ்ந்துள்ள இந்தச் சந்திப்பு, தலித் சமூகத்தை அடையாளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியை கோபமடைய செய்துள்ளது.

பிரியங்கா, சந்திரசேகர் ஆசாத் இருவருக்கும் இடையே சந்திப்பால், தேர்தலில் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்படி தமது கட்சி நிர்வாகிகளுக்கு மாயாவதி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன்,  பிரியங்காவின் இந்த செயலுக்கு பாடம் புகட்டும் விதத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மீண்டும் போட்டியிட உள்ள அமேதி தொகுதியில் அவருக்கு போட்டியாக, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவை களமிறங்கும்படி கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close