மக்களவைத் தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தேசியவாத காங்கிரஸ்!

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 09:51 pm
nationalist-congress-party-announces-list-of-12-candidates-for-lok-sabha-poll

மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் முதல் பட்டியலை தேசியவாத காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது. அதில், சரத் பவாரின் மகள் சுப்ரியா உட்பட 12 பேரின் பெயர் இடம்பெற்றுள்ளன.

வரும் மக்களவைத் தேர்தலில், மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக -சிவசேனா கூட்டணியை எதிர்கொள்ள, தேசியவாத காங்கிரஸ் காங்கிரஸுடன் கைகோர்த்துள்ளது. அங்கு மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் 26 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 22 இடங்களிலும் போட்டியிட உள்ளன.

இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக்கட்சி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.

அதில் சரத் பவாரின் மகள் சுப்ரியா, மாநிலத்தின் முன்னாள் அமைச்சர்கள் சுனில் தாக்ரே, குலப்ரோ தேவ்கார் உள்ளிட்ட 12 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

வரும் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என சரத் பவார் சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close