மேற்கு வங்கம் உள்ளிட்ட 4 மாநிலங்களில்தேர்தல் குழு ஆய்வு !

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 07:50 am
election-committee-inspection-in-4-states-including-west-bengal

மேற்கு வங்கம், திரிபுரா, அசாம், மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில், நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை, துணைத் தேர்தல் ஆணையர், சுதீப் ஜெயின் தலைமையிலான குழு ஆய்வு நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி தொடங்கி, மே மாதம் 19 வரை, 7 கட்டங்களாக, நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 7 கட்டங்களாகவும், திரிபுரா மற்றும் மணிப்பூரில் 2 கட்டங்களாகவும், அசாமில் 3 கட்டங்களாகவும், தேர்தல் நடைபெறவுள்ளது.

கடந்த 13ஆம் தேதி, டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழுவினர், மேற்கு வங்கத்தை பதற்றமான மாநிலமாக அறிவிக்கக் கோரிக்கை விடுத்தனர். 

இதனையடுத்து, மேற்கு வங்கத்தில், தற்போதுள்ள நிலைமை குறித்து அறிக்கை அளிக்கும்படி, மேற்கு வங்க மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம், தேர்தல் குழு உத்தரவிட்ட நிலையில், மேற்கு வங்கம், திரிபுரா, அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களின் தேர்தல் ஏற்பாடுகளை, நாளை (சனிக்கிழமை) முதல் ஐந்து நாட்கள், துணை தேர்தல் ஆணையர், சுதீப் ஜெயின் தலைமையிலான குழு ஆய்வு செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close