கட்சியை விட்டு வெளியேறியதால் வாழ்த்தியவரை திட்ட முடியுமா? - நெகிழ வைத்த நிதின் கட்கரி

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 10:25 am
nitin-gadkari-wishes-his-rival-candidate

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் முன்பு வாழ்த்து பெற்ற அதே நபர், தற்போது அவரையே எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்குகிறார். ஆனால், அவரை விமர்சிக்க மறுத்த கட்கரி, மீண்டும் வாழ்த்துக் கூறியுள்ளார்.

மகாராஷ்டிரத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யான நானா படோல், நிதின் கட்கரியின் ஆதரவாளராக இருந்தார். அந்த சமயங்களில் கட்கரியிடம் அவர் ஆசி பெற்றிருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் கட்சியை விட்டு வெளியேறிய நானா படேல், காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானார். தற்போது, நிதின் கட்கரி போட்டியிடவுள்ள நாக்பூர் தொகுதியிலேயே, காங்கிரஸ் வேட்பாளராக நானா படேல் களமிறக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, நிதின் கட்கரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். குறிப்பாக, உங்களிடம் ஆசி பெற்றவர், உங்களுக்கு எதிராகவே களமிறங்குகிறாரே என்ற கேள்வியை முன்வைத்தனர்.

அப்போது, “அரசியலில் நான் விரோதத்தை விரும்புவதில்லை. ஆகவே, நானா படேலுக்கு வாழ்த்துக்கள். ஒருவர் கட்சியை விட்டு விலகி விட்டால், அவரை வாழ்த்தியதும் அப்படியே போய்விடுமா என்ன? எந்தவொரு வேட்பாளருக்கும் தேர்தலில் போட்டியிட உரிமை இருக்கிறது. ஆகவே, எந்த வேட்பாளர் குறித்தும் நான் கருத்து கூறவோ, விமர்சிக்கவோ விரும்பவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் நான் மேற்கொண்ட மக்கள் பணிகளை சொல்லித்தான் வாக்குகளை கேட்பேன்’’ என்றார் கட்கரி. 

சொந்தக்கட்சியில் இருக்கும்போதே சிலர் சதி வலை பின்னுவதும், திரைமறைவில் சூழ்ச்சி செய்வதும் சகஜமாகிவிட்ட அரசியல் உலகில், மாற்றுக்கட்சிக்கு சென்றது மட்டுமல்லாமல் தன்னையே எதிர்த்து போட்டியிடுபவரை நிதின் கட்கரி வாழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close