மக்களவைத் தேர்தல் வரலாற்றிலேயே இதுவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனில் பாசுவும் பெற்றுள்ளனர்.
17 - ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், ஏப்ரல் 11 -ஆம் தேதி தொடங்கி மே மாதம் 19 -ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. வாக்குகள் மே 23 -ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
இந்த முறையும் உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி மற்றும் தமது சொந்த மாநிலமான குஜராத்தின் வதோதரா ஆகிய இரு தொகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி களம் காண உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2014 -ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், வதோதரா தொகுதியில் 5. 75 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். அதாவது, பாஜக சார்பில் போட்டியிட்ட மோடி மொத்தம் 8. 5 லட்சம் வாக்குகளை அள்ளிய நிலையில், அவருக்கு அடுத்தப்படியாக வந்த காங்கிரஸ் வேட்பாளர் மதுசூதன் மிஸ்ட்ரி 2.75 லட்சம் வாக்குகளை மட்டுமே பெற முடியும். எனவே, அத்தொகுதியில் 5.75 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி வெற்றி பெற்றார்.
இது, மக்களவைத் தேர்தல் வரலாற்றிலேயே இரண்டாவது மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் பெறப்பட்ட வெற்றியாகும்.
முன்னதாக, 2004 மக்களவைத் தேர்தலில், மேற்கு வங்க மாநிலம், அறம்பாக் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அனில் பாசு 5.9 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இதன் மூலம், மக்களவைத் தேர்தல் வரலாற்றிலேயே இதுவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற வேட்பாளர்களின் வரிசையில் அவர் முதலிடத்தில் உள்ளார்.
newstm.in