அரசியல் கட்சிகளுக்கு இனி இந்த சின்னங்கள் கிடையாது!

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 10:00 pm
election-commission-bans-use-of-animals-during-political-rallies

அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரசாரம், பேரணிகளில் யானை, குதிரை உள்ளிட்ட விலங்குகளை ஈடுப்படுத்த தடைவிதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், புதிதாக உருவாகும் அரசியல் கட்சிளுக்கு இனி எந்தவொரு விலங்கையும் குறிக்கும் விதத்தில் சின்னங்கள் வழங்கப்படமாட்டாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள சில அரசியல் கட்சிகளுக்கு யானை உள்ளிட்ட விலங்குகளை குறிக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், தங்கள் கட்சிகளின் சின்னம் வாக்காளர்கள் மனதில் நன்றாக பதிய வேண்டும் என்பதற்காக தேர்தல் பிரசாரம், பேரணிகளில், தங்களது கட்சியின் சின்னமாக உள்ள விலங்குகளையும் அரசியல் கட்சிகள் ஈடுபடுத்தி வருகின்றன.

பல்லாயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் பங்கேற்கும் கூட்டங்கள், ஊர்வலங்களில் விலங்குகளையும் பங்கேற்க வைப்பதால் அவை உடல் மற்றும் மனரீதியாக பல்வேறு துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.

எனவே, அரசியல் கட்சிகள், தங்களது தேர்தல் பிரசாரங்களில் விலங்குகளை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என்று பல்வேறு விலங்குகள் நல அமைப்புகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தன.

இதையடுத்து, அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் பிரசாரம், பேரணிகளில் இனி விலங்குகளை பயன்படுத்த முற்றிலும் தடைவிதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும்,  இனி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கோரி புதிதாக பதிவு செய்யும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் விலங்குகளை குறிக்கும் விதத்திலான சின்னங்கள் ஒதுக்கப்பட மாட்டாது எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

உத்தரப் பிரதேசத்தில் பிரபலமான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் யானை என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close