நாடாளுமன்றத் தேர்தல் - பா.ஜ.க. முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 10:14 am
bjp-to-release-first-list-of-candidates-today

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க.வின் முதலாவது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படவுள்ளது. ஏப்ரல் 11ம் தேதி நடைபெறும் முதல்கட்ட தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்களை அதிகம் கொண்டதாக அந்தப் பட்டியல் இருக்கும் எனத் தெரிகிறது.

பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் பணிக்குழு கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் முதலாவது வேட்பாலர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும் என தெரிகிறது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் முதல்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு செய்யப்படுகிறது.

அதேபோல, உத்தரப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், ஒடிஸா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஒருசில தொகுதிகளுக்கும் ஏப்ரல் 11ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மத்திய அமைச்சர்கள் சத்ய பால் சிங், வி.கே.சிங், மகேஷ் சர்மா, கிரிராஜ் சிங், கிரண் ரெஜிஜு உள்ளிட்டோர் பா.ஜ.க.வின் முதலாவது வேட்பாளர் பட்டியலில் இடம்பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close