ராகுல் காந்தி கர்நாடகத்தில் இருந்து போட்டியிட வேண்டும்: சித்தராமையா

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 10:59 am
siddaramaiah-wants-ragul-gandhi-to-contest-from-karnataka

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக மாநிலத்தில் இருந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவருமான சித்தராமையா விருப்பம் தெரிவித்துள்ளார். 

தற்சமயம், உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி தொகுதியின் எம்.பி.யாக ராகுல் காந்தி உள்ளார். இந்நிலையில், டுவிட்டரில் தனது விருப்பத்தை தெரிவித்துள்ள சித்தராமையா, “காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர்களுக்கு காங்கிரஸ் எப்போதும் ஆதரவாகவே இருந்திருக்கிறது. திருமதி. இந்திரா, திருமதி. சோனியா அவர்களின் போட்டியிலும் இது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே, நாட்டின் அடுத்த பிரதமரான திரு. ராகுல் காந்தி கர்நாடகத்தில் போட்டியிட வேண்டும் என விரும்புகிறோம்’’ என்று கூறியுள்ளார்.

கடந்த 1999ம் ஆண்டில் பெல்லாரி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் சுஷ்மா ஸ்வராஜை சோனியா காந்தி தோற்கடித்தார். 1978-இல் சிக்மகளூர் தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close