ஒடிஸா - காங்கிரஸ் எம்.எல்.ஏ. திடீர் விலகல்

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 11:11 am
odisha-congress-mla-resigns-from-party

ஒடிஸா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வான பிரகாஷ் சந்திர பெஹெரா திடீரென பதவி விலகியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். தனது ராஜிநாமா கடிதத்தை, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரகாஷ் சந்திர பெஹரா அனுப்பி வைத்துள்ளார். கட்சியில் தான் ஓரம்கட்டப்படுவதாலேயே ராஜிநாமா செய்துள்ளதாக பெஹெரா தெரிவித்திருக்கிறார்.

ஒடிஸாவில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து, சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இந்தச் சூழ்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., கட்சியில் இருந்து விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஒடிஸாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் அல்லது பா.ஜ.க.வில் இணையும் நோக்கத்திலேயே பிரகாஷ் சந்திர பெஹெரா ராஜிநாமா செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close