ஆபத்துன்னா எனக்கு போன் போடுங்க - மாயாவதிக்கு உமா பாரதி அட்வைஸ்

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 12:01 pm
uma-bharti-told-mayawati-to-call-her-for-emergency-case

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு, சமாஜ்வாதி கட்சித் தொண்டர்களால் ஏதேனும் ஆபத்து ஏற்படுமானால், என்னை செல்போனில் தொடர்பு கொள்ளலாம் என்று மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான உமா பாரதி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநில அரசியலில் எதிரெதிர் துருவங்களில் உள்ள சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றன. இந்நிலையில், சமாஜ்வாதி நிறுவனத் தலைவர் முலாயம் சிங்கிற்கு ஆதரவாக பிரசாரம் செய்யவிருப்பதாக மாயாவதி கூறியிருந்தார். அதுகுறித்து உமா பாரதி விமர்சித்துள்ளார். சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

1995ம் ஆண்டில், உத்தரப் பிரதேச அரசு விருந்தினர் மாளிகையில், பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் மாயாவதி ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, அவர் மீது தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் சமாஜ்வாதி கட்சியினர் சுற்றி வளைத்ததாகவும், அப்போதைய பாஜக எம்.எல்.ஏ. பிரஹம் தத் துவிவேதி தலையிட்டு, மாயாவதி உள்ளிட்டோரை காப்பாற்றியதாகவும் தெரிகிறது.

இதை சுட்டிக் காட்டிய உமா பாரதி, "இப்போதும் சமாஜ்வாதி கட்சியினர் உங்கள் மீது தாக்குதல் நடத்தலாம். எனது செல்போன் நம்பரை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏதேனும் ஆபத்து என்றால் கூப்பிடுங்கள். நான் வந்து காப்பாற்றுகிறேன்'' என்று மாயாவதிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close