பா.ஜ.,வின் புதிய தாரக மந்திரம்: ‛நானும் காவல்காரனே’

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 01:13 pm
with-pm-modi-s


‛‛தேசத்தின் நலனிலும், முன்னேற்றத்திலும் அக்கறை கொண்டிப்போர்; ஊழல், குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒவ்வொருவரும், ‛சவுக்கிதார்’ எனப்டும் காவல்காரர்களே’’ என, பிரதமர் நரேந்திர மாேடி கருத்துப் பதிவிட்டுள்ளார். இதன் மூலம், ‛மை பீ சவுக்கிதார்’ - ‛நானும் காவல்காரனே’ என்ற புதிய தாரக மந்திரத்தை பா.ஜ., அறிமுகம் செய்துள்ளது. 

கடந்த 2014 தேர்தலின் போது, ‛நாட்டை காக்கும் காவல்காரனாக நான் இருப்பேன்’ எனக் கூறி, பிரசாரம் செய்த, பா.ஜ.,வின் அப்பாேதைய  பிரதமர் வேட்பாளர் நரேந்திர மாேடி, தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் பிரதமரானார். தான் நாட்டின் பிரதமர் ஆக விரும்பவில்லை என்றும், பிரதான சேவகனாக இருந்து நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகவும் கூறினார். 

இந்நிலையில், தான் மட்டுமே காவல்காரன் இல்லை என்றும், நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டுள்ள; ஊழல், குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒவ்வொருவரும் காவல்காரர்களே. இம்முறை, நான் தனியாக அல்ல, ‛நானும் ஓர் காவல்காரன்’ என நினைக்கும் குடிமக்கள் ஒவ்வொருவருடன் சேர்ந்து, தேசத்தை முன்னேற்றும் பணியை செய்யப்போகிறேன். 

தேச நலனில் அக்கறை கொண்டுள்ள ஒவ்வொருவரும், நானும் ஓர் காவல்காரன் என்ற வாசகத்தை மனதில் நினைத்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும்’’ என பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

இதன் மூலம், இந்த தேர்தலில், ‛மை பீ சவுக்கிதார்’ அதாவது ‛நானும் காவல்காரனே’ என்ற வகையில், ஒவ்வொரு குடிமகனும், ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என, பா.ஜ., சார்பில் அறிவுருத்தப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close