ம.ஜ.த., பொதுசெயலர் மாயாவதி கட்சியில் ஐக்கியம்

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 01:57 pm
janata-dal-secular-s-danish-ali-joins-mayawati-s-party-ahead-of-polls

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியில் பொது செயளராக இருந்த, தானிஷ் அலி அந்த கட்சியிலிருந்து விலகி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். 

கர்நாடகாவில் ஆளும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி, உத்தர பிரதேசத்திலும் கட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில், தேவகவுடாவுக்கு மிகவும் நெருக்கமானவரும், உ.பி., மாநில பொதுசெயலருமாக இருந்த, தானிஷ் அலி, அந்த கட்சியிலிருந்து விலகி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். 

இது குறித்து, தானிஷ் அலி கூறுகையில், ‛‛கர்நாடகத்தில் ஆளும் கட்சியாக உள்ள ம.ஜ.த., அமைப்பு ரீதியில் பலமற்ற கட்சியாக உள்ளது. அந்த கட்சியில் இருந்துகொண்டு, உ.பி.,மாநில அரசியலில் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. எனவே, மாயாவதியின் பகுஜன் சமாஜில் இணைந்துள்ளேன்’’என்றார். 

வரும் லோக்சபா தேர்தலில், தானிஷ் அலி, உத்தர பிரதேசத்தின் ஏதேனும் ஒரு தாெகுதியில், பகுஜன் சமாஜ் சார்பில் வேட்பாளராக களம் இறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close