பா.ஜ., ஆட்சி நீடிக்குமா? அரசியலில் உச்சகட்ட பரபரப்பு

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 06:45 pm
congress-claims-to-form-government-in-goa


லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், பா.ஜ.,தலைமையிலான ஆட்சி நடக்கும் கோவாவில், தனிப் பெரும் கட்சி என்ற வகையில், தங்களை ஆட்சி அமைக்க அழைக்கும் படி கவர்னரிடம் காங்கிரஸ் உரிமை கோரியுள்ளதால் அந்த மாநில அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


கோவாவில், பா.ஜ.,வை சேர்ந்த, எம்.எல்.ஏ., பிரான்சிஸ் டிசோசா கடந்த மாதம் காலமானார். ஏற்கனவே, முதல்வர் மனோகர் பரீக்கர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், டிசோசாவின் மரணத்தால், அந்த கட்சி எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 

அந்த மாநிலத்தில் தனிப் பெரும் கட்சியாக உள்ளபோதும், போதிய எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இல்லாததால், காங்கிரஸ் கட்சியால் அங்கு ஆட்சி அமைக்க முடியவில்லை. காங்கிரசை விட குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், பிற கட்சிகள் ஆதரவுடன், பா.ஜ., ஆட்சி அமைத்துள்ளது. 

இந்நிலையில், மாநில முதல்வர் மனோகர் பரீக்கர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், அந்த மாநில அரசியலில் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பா.ஜ., எம்.எல்.ஏ., பிரான்சிஸ் டிசோசா கடந்த மாதம் காலமானார். 

இதனால், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களின் பலம் மேலும் குறைந்துள்ளது. இதனால், தனிப்பெரும் கட்சி என்ற வகையில், தங்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும் படி, அந்த மாநில கவர்னருக்கு, காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. 

காங்கிரசின் இந்த நகர்வால், கோவா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வினர் தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். 

தற்போது, தேர்தல் அரசியல் மட்டுமின்றி, மாநிலத்தில் பா.ஜ., ஆட்சி நிலைக்குமா அல்லது ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றுமா என்ற பரபரப்பும் அதிகரித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close