கோவாவில் ஆட்சியமைக்க உரிமை கோரும் காங்கிரஸ்!

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 12:09 pm
parikkars-health-woorsened-bjp-central-leaders-on-the-way-to-goa

கோவா மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டதாகவும், இதனால், தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி உரிமை கோரியுள்ளது.

மொத்தம் 40 உறுப்பினர்களைக் கொண்ட கோவா சட்டப்பேரவையில் பா.ஜ.க.வுக்கு 13 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில், ஆளுநருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சந்திரகாந்த் காவ்லேகர், எழுதியுள்ள கடிதத்தில், “பா.ஜ.க.வைச் சேர்ந்த பிரான்சிஸ் டி சோஸா எம்.எல்.ஏ.வின் சோகமான மறைவுக்குப் பிறகு, தற்போது பதவியில் இருக்கும் மனோகர் பாரிக்கர் தலைமையிலான அரசு, மக்களின் நம்பிக்கையையும், பேரவையில் பெரும்பான்மை பலத்தை இழந்திருக்கிறது. ஆகவே, பாஜக அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு, பேரவையில் தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close