ஜெகன் மோகன் கட்சியில் இணைந்த ஆளுங்கட்சி வேட்பாளர்

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 01:01 pm
jagan-mohan-reddy-releases-candiate-list-for-lok-sabha-assembly-polls

ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அடல பிராபகர் ரெட்டி, ஜெகன் மோகன் முன்னிலையில், அவரது கட்சியில் இணைந்தார். இதனால், ஆளும்தரப்பு அதிரர்ச்சியடைந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் ஒரே சமயத்தில் நாடாளுமன்றத் தேர்தலும், சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. மொத்தம் 25 நாடாளுமன்றத் தொகுதிகளும், 175 சட்டப்பேரவைத் தொகுதிகளும் உள்ளன. இந்நிலையில், நெல்லூர் புறநகர் தொகுதியின் தெலுங்கு தேசம் வேட்பாளராக, முன்னாள் அமைச்சர் பிரபாகர் ரெட்டியை, அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான சந்திரபாபு நாயுடு நிறுத்தினார். ஆனால், அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் ஜெகன் மோகனைச் சந்தித்த அவர், தன்னை ஒ.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார்.

மற்றொரு வேட்பாளரான தொடா திருமுர்துலுவும், ஜெகன் மோகன் கட்சியில் இணையவிருப்பதாகக் கூறப்படுகிறது.
newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close