காங்கிரஸில் இணைந்த பாஜக முன்னாள் முதல்வரின் மகன்!

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 02:57 pm
son-joined-hands-with-congress-even-his-father-had-a-bjp-former-cm-in-uttarkand

உத்தரகண்ட் மாநில பாஜக முன்னாள் முதல்வர் புவன் சந்திர கந்தூரியின் மகன் மணீஷ் கந்தூரி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

 மாநிலத் தலைநகர் டேராடூனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் அவர் காங்கிரஸில் இணைந்தார்.

முன்னாள் ராணுவ ஜெனரலான புவன் சந்திர கந்தூரி, பாஜக ஆட்சியில் உத்தரகண்ட்  மாநில முதல்வராக பதவி வகித்துள்ள நிலையில், அவரது மகன் மணீஷ் கந்தூரி தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், அவரது தந்தை எம்.பி.யாக பதவி வகிக்கும் பௌரி மக்களவைத் தொகுதியில், மணீஷ் கந்தூரி இந்த முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close