பீகாரில் தலா 17 தொகுதிகளில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் போட்டி

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 04:26 pm
seat-sharing-in-bihar-announced-by-nda

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பீகாரி மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் ஐக்கிய ஜனதா தளத்திற்கு 17 இடங்களும், லோக் ஜனசக்தி கட்சிக்கு 6 இடங்களும் ஒதுக்கப்படும் நிலையில், மீதமுள்ள 17 இடங்களில் பாஜக போட்டியிடவுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், லோக் ஜன சக்தி கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்த நிலையில், இட ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த நிலையில், இன்று மூன்று கட்சிகளும் சேர்ந்து செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டனர்.

ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் வசிஷ்ட நாராயணன் சிங், பாரதிய ஜனதாவின் மாநிலத்தலைவர் நித்தியானந்த் ராய், லோக் ஜனசக்தி கட்சியின் மாநில தலைவர் பசுபதி குமார் பராஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் போட்டியிடவுள்ள இடங்கள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

அதன்படி, பிகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தள கட்சி 17 தொகுதிகளிலும், பாரதிய ஜனதா கட்சி 17 தொகுதிகளும், லோக் ஜனசக்தி கட்சி 6 தொகுதிகளிலும் போட்டியிடும், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று கட்சிகளுக்கும் எந்தெந்த தொகுதிகள் என அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அங்கு போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் 2-3 நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close