கூட்டணிக்கு ஓகே தான் ... ஆனா ... ராகுலுக்கு அல்வா கொடுக்கும் ஒமர் அப்துல்லா!

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 05:59 pm
no-compromise-on-kashmir-seats-nc-leader-omar-abdullah-to-congress

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில், காங்கிரஸுடன் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ள தயார். ஆனால், காஷ்மீர் பகுதியில் உள்ள மூன்று மக்களவைத் தொகுதிகளிலும் தங்கள் கட்சி தான் போட்டியிடும் என்று தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில், ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. காங்கிரஸின் இந்த முயற்சி குறித்து, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா கூறியது:

காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ள நாங்கள் தயார் தான். ஆனால், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள மூன்று மக்களவைத் தொகுதிகளிலும் தேசிய மாநாட்டு கட்சி தான் போட்டியிடும். இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டால் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொள்ள தயார்.

ஆனால், இந்த மூன்று தொகுதிகளில் ஒன்றை கூட விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை. எங்களது இந்த நிலைப்பாட்டை காங்கிரஸ் தலைமையிடம் தெரிவித்தாகிவிட்டது. ஆனால், இதுவரை அவர்களிடம் எந்த பதிலும் இல்லை என்று ஒமர் அப்துல்லா கூறினார்.

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர், பாராமுல்லா, அனந்த்நாக், லடாக், உதம்பூர் மற்றும் ஜம்மு என ஆறு மக்களவைத் தொகுதிகள் உள்ளன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close