ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைத்தால் பாதிப்பு ஏற்படும் - ராகுலுக்கு டெல்லி காங்கிரஸ் கடிதம்

  Newstm Desk   | Last Modified : 19 Mar, 2019 10:39 am
alliance-with-aap-will-be-harmful-sheila-to-rahul-gandhi

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்தால் கட்சியின் எதிர்கால நலனுக்கு பாதிப்பு ஏற்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஷீலா தீட்சித் கடிதம் எழுதியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி டெல்லியில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே கூட்டணி ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆம் ஆத்மி 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிடுவது என்று தொகுதி உடன்பாடு ஏற்பட்டதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், டெல்லி மாநில காங்கிரஸார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் நேற்று இதுதொடர்பாக பேசும்போது, பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளுடன் கூட்டணி வைப்பது என்ற கொள்கை முடிவை டெல்லி காங்கிரஸ் நிர்வாகிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்தச் சூழலில், ராகுல் காந்தி ஷீலா தீட்சித் எழுதியுள்ள கடிதத்தில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்தால், காங்கிரஸின் எதிர்கால நலனுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close