அரசியல் ஆதாயத்துக்காக விவசாயிகளை வஞ்சித்த மாநில அரசுகள் - ஜெட்லி காட்டம்

  Newstm Desk   | Last Modified : 20 Mar, 2019 10:28 am
jaitely-slams-opposition-govt-for-non-implementation-of-farmers-scheme

நாடெங்கிலும் விவசாயிகளுக்கு ரூ.2,000 நிதியுதவி வழங்க மத்திய அரசு அறிவித்த திட்டத்தை மேற்கு வங்கம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக செயல்படுத்தவில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, நாடெங்கிலும் உள்ள 12 கோடி சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கப்படும் எனவும், அந்தத் தொகை 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்  என்றும் மத்திய அரசு  அறிவித்திருந்தது. அத்திட்டம் தமிழகம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டது. இந்நிலையில், டுவிட்டரில் ஜெட்லி வெளியிட்டுள்ள பதிவில், “விவசாயிகள் நலன் சார்ந்த விஷயங்களில் அரசியல் செய்யக் கூடாது. மேற்கு வங்கம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், டெல்லி மாநில அரசுகள் ஒரு விவசாயிக்கு கூட உதவித் திட்டத்தின்படி நிதி வழங்கவில்லை. கர்நாடக மாநிலம் 17 பேருக்கு மட்டும் பணம் கிடைக்கச் செய்துள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close