ஹெலிகாப்டர் முதல் துப்பாக்கி வரை ஊழல் தான்:  காங்கிரஸ் மீது மோடி குற்றச்சாட்டு

  Newstm Desk   | Last Modified : 21 Mar, 2019 07:40 am
from-jeep-scam-to-gun-pm-modi-warns-congress

இந்திய படைகளுக்கு ஜீப் வாங்கியது முதல் ஹெலிகாப்டர் வாங்கியது வரை ஊழல் தான் நிலைகொண்டிருந்தது என காங்கிரஸ் மீது பிரதமர் மோடி இணையதளத்தில் காங்கிரஸை குற்றங்சாட்டியுள்ளார். 

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, சமூக இணையதளங்கள் மூலம்  மோடி பிரசாரம் செய்து வருகிறார்.  நேற்று (புதன்கிழமை) அவர் தனது இணையதளத்தில் எழுதிய கட்டுரையில்,  வாக்களிப்பவர்கள் கடந்த கால ஆட்சியை, நினைவில் வைத்துக் கொண்டு வாக்களிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். 

மேலும்,  அதில் அவர் எழுதியிருப்பதாவது:  குடும்ப அரசியல் நடத்துகிற கட்சிகள், ஊடகங்கள் சுதந்திரமாகவும், துடிப்பாகவும் செயல்படுவதை வசதியாக கருதுவது கிடையாது. பேச்சு சுதந்திரத்தை குறைத்தது தான் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த முதல் அரசியல் சாசன திருத்தம். 

1947-ம் ஆண்டுக்கு பின்னர் காங்கிரஸ் அரசில் பாதுகாப்புத்துறையில் பல ஊழல்கள் அரங்கேறி உள்ளன. படைகளுக்கு ஜீப் வாங்கியது முதல் துப்பாக்கி, நீர்மூழ்கி கப்பல், ஹெலிகாப்டர் வாங்கியது வரை எல்லாவற்றிலும் ஊழல்தான்.  பயங்கரவாதிகள் மீது நமது படையினர் தாக்குதல் நடத்துகிறபோது, காங்கிராஸார் குற்றஞ்சட்டுகின்றனர். பயங்கரவாதிகள் மீது நமது விமான படையினர் தாக்குதல் நடத்துகிறார்கள் என்றால் அதன்மீதும் காங்கிரஸ் கேள்வி எழுப்புகிறது. அந்தக் கட்சியில் உள்கட்சி ஜனநாயகம் என்பது கிடையாது. கட்சியின் தலைவர் ஒருவர், தலைமைப் பொறுப்புக்கு வர விரும்பினால், அவரை தூக்கி எறிந்து விடுவார்கள். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close