கூட்டணி அறிவிப்பு எப்போது?- லாலு மகன் தேஜஸ்வி யாதவ் பதில்

  Newstm Desk   | Last Modified : 21 Mar, 2019 11:42 am
seat-sharing-announcement-after-holi-tejaswi-yadav

பீகாரில் மகா கூட்டணியில் அமைந்துள்ள கட்சிகளுக்கு இடையேயான தொகுதி உடன்பாடு குறித்து ஹோலி பண்டிகைக்கு பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் இளம் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். இவர் லாலு பிரசாத்தின் மகன் ஆவார்.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி, லோக் தந்திரிக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மகா கூட்டணியை அமைத்துள்ளன. எதிரணியில் உள்ள பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் தொகுதி உடன்பாட்டை அறிவித்துவிட்டன. ஆனால், மகா கூட்டணியில் இதுவரை தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில், ஹோலிக்குப் பிறகு தொகுதி உடன்பாடு அறிவிப்பு வெளிவரும் என்றும், கூட்டணிக் கட்சிகளிடையே எந்தவித முரண்பாடுகளும் இல்லை என்றும் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். ஹோலிப் பண்டிகை இன்றோடு முடிவடைவது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close